வீரம் - முன்னோட்டம்!

புதன், 8 ஜனவரி 2014 (18:01 IST)
வீரம் படத்துக்கு முன்னோட்டம் தேவையா? அஜித்தின் லுக், அவரின் ஜோடி, படத்தின் பாடல்கள், உடன் நடித்த நடிகர்கள் என்று அனைத்தும் இந்நேரம் அனைவருக்கும் அத்துப்படியாகியிருக்கும்.
FILE

அஜித் தனது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை இதிலும் தொடர்கிறார். போனஸாக தாடி. அஜித்திடம் படம் குறித்து பேசப் போன போது தாடியுடன் இதே கெட்டப்பில் இருந்திருக்கிறார். அட, நம்ம படத்தில் எப்படி அஜித் இருக்க வேண்டும் என்று நினைத்தோமோ அதே லுக்கில் வரவேற்கிhரே என்று முதல் சந்திப்பிலேயே சந்தோஷ ஷாக்கிற்கு ஆளாகியிருக்கிறார் இயக்குனர் சிவா.

அஜித்துக்குப் படத்தில் பாலா, விதார்த் உள்பட நான்கு தம்பிகள். தாடி மீசையுடன் அவர்களும் ஒரு மார்க்கமாகவே இருக்கிhர்கள். அண்ணனுக்கேற்ற தம்பிகள். சிறுத்தை படத்துடன் பெரிய குடும்பத்தால் சத்தமில்லாமல் விரட்டப்பட்ட தமன்னா ஹீரோயின். பெரிய குடும்பத்தால் பாதிக்கப்பட்டார் என்பதற்காகவே தமன்னாவை அஜித் கமிட் செய்ததாக இன்றளவும் ஒரு கிசுகிசு நிலவுகிறது.
FILE

தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு இது ஸ்பெஷல் படம். சிவா, அஜித் இருவருடன் இவர் இணைந்து பணிபுரிவது இதுதான் முதல்முறை. தேவி ஸ்ரீ பிரசாத் போட்ட தீம் மியூஸிக் படத்துக்கு பக்காவாக பொருந்தியிருக்கு என்ற சிவாவின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

ரயில் சண்டை, வீதி சண்டை என்று ஆக்ஷனுக்கு குறைவில்லை. என்னுடைய மனதுக்கு பிடித்தமான ஆக்ஷன் காட்சிகள் சில இந்தப் படத்தில் இருக்கு என ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா வியக்கிறார்.

அஜித்தை வைத்து பொங்கல் ரிலீஸாக ஒரு படம் என்று முடிவானபோதே தயாரிப்பாளர் சிவாவிடம், குடும்பத்தோடு நாலு வயசு முதல் அறுபது வயசுவரை உள்ளவர்கள் ரசிக்கிற மாதிரி இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.
FILE

அதில் இம்மி பிசகாமல் ஹோல்சம் பேமிலி என்டர்டெயினராக படம் இருக்கும் என உத்தரவாதம் தருகிறார் சிவா. சென்சாரும் அதனை உறுதி செய்வது போல் யு சான்றிதழ் தந்துள்ளது.

ஜனவரி 10 வெளியாகும் படத்தை பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, திருட்டு டிவிடியில் மட்டும் பார்க்காதீர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்