மத கஜ ராஜா- சிரிப்புக்கு கியாரண்டி

வியாழன், 5 செப்டம்பர் 2013 (10:42 IST)
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரித்த மத கஜ ராஜா 2012 டிசம்பரிலேயே வெளிவந்திருக்க வேண்டிய படம். கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு என்று அடுத்தடுத்த ஹிட் தந்து கமர்ஷியல் hட் சீட்டில் அமர்ந்திருக்கும் சுந்தர் சி. இயக்கிய படமென்றால் பiஜக்கே முன்பணம் தர விநியோகஸ்தர்கள் தயார். இப்படி எல்லா திசையிலும் ஆதரவு காற்று இருந்தும் மத கஜ ராஜா இவ்வளவு நாள் இழுத்தடிக்கப்பட்டது ஆச்சரியம்.
FILE

தற்போது விஷாலே தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் படத்தை வெளியிடுகிறார். இந்தமுறை கேரளா பக்கமும் அவர் படத்தை பிரமோட் செய்ய ஆர்வம் காட்டியது ஆரோக்கியமான விஷயம்.

FILE
படத்தில் வரலட்சுமி, அஞ்சலி என்று இரண்டு பேர். கவர்ச்சியில் வரலட்சுமியை அசட்டையாக ஓரங்கட்டியிருக்கிறாராம் அஞ்சலி. நடிப்பு என்று வந்தால் இரண்டு பேரும் ராட்சஸிகள். ஆனாலும் படத்தைக் காப்பாற்றப் போவது சந்தானம்தான் என்கிறார்கள்.

முந்தையப் படங்களில் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தராத சுந்தர் சி. நடித்திருப்பது விஷால் என்பதால் அடிதடிக்கு முக்கியத்துவம் தந்திருக்கிhர். கையில் அரிவாளை வைத்துக் கொண்டு பென்சிலாவது சீவாவிட்டால் எப்படி?
FILE

விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன். சோனுசூட்தான் படத்தில் வில்லனாம்.

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் விஷாலுக்கு மத கஜ ராஜா ஆறுதல் வெற்றியை தரும் என உறுதியாக நம்பலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்