நேர் எதிர் - சென்னையின் ராத்திரிகள்

வியாழன், 23 ஜனவரி 2014 (11:00 IST)
ரிச்சர்ட் துப்பாக்கி பிடித்திருக்ககும் போஸ்டர், இதுவொரு க்ரைம் த்ரில்லர் என்பதை சொல்கிறது. இயக்குனர் ஜெய பிரதீப்பும் அதனை ஆமோதித்தார்.
FILE

ஐந்து முக்கிய கதாபாத்திரங்களும் ஒரு துப்பாக்கியும்தான் கதை. அந்த துப்பாக்கி ஆறாவது கதாபாத்திரம்.

கன்டென்டை எல்லாம் ரொம்ப கச்சிதமாக சொல்கிறார். படம் எப்படி இருக்கும்? படத்தைப் பார்த்த தாணு ரொம்பவும் இம்ப்ரசாகி படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளார். ஆக, நம்பிப் பார்க்கலாம் என்ற அபிப்ராயம் நிலவுகிறது இன்டஸ்ட்ரியில்.

ராத்திரி நேர சென்னையை படத்தில் பிழிந்திருக்கிறார்கள். முழுப்படமும் சென்னையில்தான். அதிலும் ராத்திரிவேளையில். எல்லோரும் தூங்குகிற நேரம். என்றாலும் அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று பிரமாண்ட அரங்கு ஒன்றை நிர்மாணித்து முக்கிய காட்சிகளை அதில் எடுத்திருக்கிறார்கள்.
FILE

ராசாமதியின் ஒளிப்பதிவு படத்தின் வலது கை என்றால் ரஹ்மானின் முன்னாள் உதவியாளர் சதீஷ் சக்ரவர்த்தியின் இசை இடது கை. ரத்தமும் சதையுமான படம் போலிருக்கிறது. நாளை வெளியாகும் மூன்று படங்களில் இதற்கு மட்டும்தான் யுஏ சான்றிதழ்.

வெப்துனியாவைப் படிக்கவும்