நான் மகான் அல்ல

வியாழன், 19 ஆகஸ்ட் 2010 (20:46 IST)
FILE
ஸ்டுடியோ கி‌‌ரீன் தயா‌ரித்திருக்கும் படம், நான் மகான் அல்ல. வெண்ணிலா கபடிக்குழுவை இயக்கிய சுசீந்திரனின் இரண்டாவது படம்.

கார்த்தி இதில் ஹீரோ, ஹீரோயின் காஜல் அகர்வால். சென்னை மிடில் கிளாஸ் இளைஞனின் கதையை இதில் சொல்லியிருப்பதாக சுசீந்திரன் கூறியிருக்கிறார்.

படத்தின் வசனத்தை பாஸ்கர் சக்தி எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜஇசையமைத்துள்ளார். பாடல்கள் நா.முத்துக்குமார், யுகபாரதி. படத்தில் ஆ‌க்சன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனல் அரசு சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.

படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் மதி. ஆ‌க்சன் படமான இதனை யதார்த்தம் மீறாமல் படமாக்கியிருப்பதாக கார்த்தி தெ‌ரிவித்தார்.

சென்சார் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்