ஜெ‌ய் ஆகா‌‌ஷ‌்-‌நிகோ‌லி‌ன் கடமை உண‌ர்‌ச்‌சி

வியாழன், 20 டிசம்பர் 2007 (13:26 IST)
webdunia photoWD
அலிபிரி மூவி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் அடடா என்ன அழகு என்ற படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. ஜெய் ஆகாஷ், நிக்கோல் இணைந்து நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின் போது ஜெய் ஆகாஷின் கால் பலமாக அடிப்பட்டு மூட்டு விலகியது. சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு வலியை பொருட்படுத்தாமல் அழகாக ஆடி அந்த பாடல் காட்சியை முடித்து கொடுத்தார்.

கடும் குளிரில் குளிர் ஜுரத்தால் நடுங்கிய நிக்கோல் அதை பொருட்படுத்தாமல் நடித்து பாடலை முடித்துக் கொடுத்தார். இருவரையும் கவனிக்க டாக்டர் ஒருவர் கூடவே இருந்தார்.

webdunia photoWD
கருணாஸ் கையில் பாம்புடன் அமர்ந்திருக்க அதை பார்த்து ஜெய் ஆகாஷ் பயப்படுவது போல் ஒரு நகைச்சுவைக் காட்சி. டம்மி பாம்பு இல்லாத காரணத்தால் நிஜ பாம்பையே தன் போர்வைக்குள் நுழைய விட்டு தலையணைக்கு பதிலாக பாம்பின் மேல் தலை வைத்து தூங்கி பிறகு அந்த பாம்பை கையில் பிடித்த படி ஒண்ணுமே தெரியாமல் வசனம் பேசி பயந்து நடுங்கி படப்பிடிப்பு குழுவினரையும், பார்வையாளர்களையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தார்.

அவ்வளவு சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்த படப்பிடிப்பை தாங்க முடியாத குளிரினாலும், பனிப்பொழிவினாலும் எதிர்பாராத விதமாக நிறுத்திவிட்டு சென்னை திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த கட்டமாக ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஜெய் ஆகாஷ், நிக்கோல், கருணாஸ் இவர்களுடன் ரகுவரன், ஆஷிஷ் வித்யார்த்தி, ஐஸ்வர்யா, ரேகா, ஆர்த்தி, யுனிஸ்டர் மனோகர், சிட்டிபாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இசை - ஜெயம் - தாமஸ்
ஒளிப்பதிவு - கிச்சாஸ்
படத் தொகுப்பு - சுராஜ்கவி
சண்டைப் பயிற்சி -பவர் பாஸ்ட், பி.ர்.ஓ. மெளனம் ரவி
நடனம் - காதல் கந்தாஸ்
தயாரிப்பு நிர்வாகம் - சேரை எஸ். ராஜூ
தயாரிப்பு - திருப்பூர எம்.வி. ராமசாமி

பாடல்கள், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -டி.எம். ஜெயமுருகன்.