ஜில்லா- அடிதடிக்குப் பஞ்சமில்லை!

புதன், 8 ஜனவரி 2014 (18:11 IST)
விஜய், மோகன்லால்... இந்த இரண்டு பெயர்களை சொல்லும் போதே பின்னணியில் வெற்றி நிச்சயம் என்று சூப்பர் ஸ்டாரின் பாடல் ஒலிப்பதை கேட்கலாம். சும்மாவே விஜய் படம் கேரளாவில் வூடு கட்டும். இதில் மோகன்லால் வேறு. லால் சொன்னது போல ஓணம் கொண்டாட கேரளா ரெடி.
FILE

எந்த இனிப்பான செய்தியையும் கசப்பான அனுபவத்துடன் தொடங்கினால்தான் இனிப்பின் அருமை தெரியும். ஸோ, தலைவா பற்றி சொல்லியாக வேண்டும். விஜய்க்கு மிஸ்ஸான படங்களில் ஒன்று தலைவா. அதற்காக பெரிய தோல்வியெல்லாம் கிடையாது. சிராய்ப்புதான். ஊதிப்பெருக்கியதில் ஊடகங்களின் பங்களிப்பு கணிசம்.

அந்த தோல்வியை மறக்க, மறுக்க ஜில்லா வெற்றி பெற்றாக வேண்டும். அதுவும் மிகப்பெரிய வெற்றி. அதற்கான எல்லா கச்சாப் பொருள்களும் கொண்ட நேசனின் ஸ்கிரிப்டை விஜய் தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை. மோகன்லாலையும் ஸ்கிரிப்ட் அசத்தியதால் pல்லா இப்போது டபுள் டமாக்கா.
FILE

படத்தில் இவர்கள் இருவருக்குமே ரௌத்திரம் பழகுற கதாபாத்திரம். அடிதடிக்கு பஞ்சமில்லை. அத்தியாவசியத்துக்கு சில பஞ்ச் டயலாக்குகளும் பேசுகிறார் விஜய். டி.இமானின் இசை படத்துக்கு மெருகு சேர்த்துள்ளது. துப்பாக்கியில் ரசிகர்களை கள்வெறி கொள்ள வைத்த காஜல்தான் இதிலும். லால் ஜோடியாக பூர்ணிமா.

இரண்டு ஸ்டார்கள் இணைந்து நடிக்கிறார்கள் என்ற உடனேயே அனைத்து ஏரியாக்களுக்கும் சூட்கேசுடன் ஆர்.பி.சௌத்ரியின் அபிபுல்லா அலுவலகத்துக்கு குவிந்துவிட்டார்கள் ஆள்கள். படப்பிடிப்பு பாதி முடிவதற்குள் மொத்த ஏரியாவையும் விற்று சோல்ட் அவுட் போர்ட் மாட்டியது ஜில்லாவின் சாதனை. சென்சாரில் யு வாங்கியது அதைவிட சாதனை.

படத்தைப் பார்க்க வேண்டியது மட்டும்தான் இனி பாக்கி.

வெப்துனியாவைப் படிக்கவும்