தொடர் ஏற்றத்தில் சென்செக்ஸ்: 57 ஆயிரத்தை தாண்டியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

வெள்ளி, 29 ஜூலை 2022 (09:17 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்த வாரத்தில் ஒரே ஒரு நாள் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் பங்கு சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை உயர்ந்து உள்ளது என்பதும் இதனால் சென்செக்ஸ் 57380  என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்செக்ஸ் 57 ஆயிரத்தைத் தாண்டி உள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் வரை உயர்ந்து 17095 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தை கடந்த இரண்டு வாரங்களாக தொடர் ஏற்றம் பெற்று வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்