மீண்டும் பங்குச்சந்தை ஏற்றம்.. 60 ஆயிரத்தை நெருங்குமா சென்செக்ஸ்?
புதன், 5 ஏப்ரல் 2023 (09:46 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் பங்குச்சந்தை ஏற்றம் கண்டது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தை விடுமுறை நாளாக இருந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியது முதல் ஏற்றத்தில் உள்ளன.
இன்று பங்குச்சந்தை சென்செக்ஸ் 230 புள்ளிகள் அதிகரித்து 59 ஆயிரத்து 340 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை 60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17460 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக மாறுகிறது
தொடர்ச்சியாக பங்கு சந்தை ஏற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் இந்த ஏற்றம் நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று சொல்லி