வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. விட்டதை பிடிக்கும் முதலீட்டாளர்கள்..!

Siva

திங்கள், 9 செப்டம்பர் 2024 (11:05 IST)
கடந்த வெள்ளி அன்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் ஆயிரம் புள்ளைகளுக்கு மேல் சரிந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே பங்கு சந்தை உயர்ந்துள்ளது அடுத்து முதலீட்டாளர்கள் விட்டதை பிடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை சரிவுடன் தொடங்கினாலும் அதன்பின் சில நிமிடங்களில் பங்குச்சந்தை மீண்டும் உயர ஆரம்பித்து விட்டது. மும்பை பங்குச்சந்தை சற்றுமுன் 162 புள்ளிகள் உயர்ந்து 81,349 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தை லிப்ட் 27 புள்ளிகள் உயர்ந்து 24,880 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. இன்றைய பங்கு சந்தையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஸ்டேட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், சன் ஃபார்மா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வேலையாகி உள்ளன.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்