உயர்ந்து கொண்டே வந்த தங்கம் விலை.. இன்றைய நிலை என்ன?

Siva

வியாழன், 26 செப்டம்பர் 2024 (11:13 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்று தங்கம் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து சென்னையில் நேற்றைய விலையில் தான் தங்கம் இன்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை என்று கூறப்படும் நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலையில் மாற்றமின்றி ஒரு கிராம்  ரூபாய்   7060 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை   ரூபாய்  56,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,515  எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,120 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்