ரூ.49 ஆயிரத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்றும் 120 ரூபாய் உயர்வு..!

Siva

வெள்ளி, 8 மார்ச் 2024 (10:18 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு சவரனுக்கு 2000 ரூபாய் உயர்ந்தது என்பதையும் பார்ப்போம். இந்த நிலையில் இன்றும் தங்கம் ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
 
தங்கம் விலை இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 15 ரூபாயும் ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் உயர்ந்துள்ளது  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6105 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 48,840 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6575 எனவும் ஒரு சவரன் ரூபாய் 52600 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 79.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 79000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்