தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்னும் குறைய வாய்ப்பு உள்ளதா?

Siva
வெள்ளி, 5 ஜனவரி 2024 (10:29 IST)
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் குறைந்துள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாட்களுக்கு குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆனால் அதே நேரத்தில் நீண்ட கால அடிப்படைகள் தங்கம் இன்னும் அதிக விலைக்கு உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5860.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து  ரூபாய் 46880.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: ரூ.16 லட்சம் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்..!
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6330.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50640.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்றி  கிராம் ஒன்றுக்கு  ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்