தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரு கிராம் 6 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

வெள்ளி, 8 டிசம்பர் 2023 (09:48 IST)
தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் ஒரு கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் தங்கம் விலை ஒரு கிராம் 6 ஆயிரத்தை நெருங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5830.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 அதிகரித்து ரூபாய் 46680.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6305.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50440.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம்  ரூபாய் 80.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்