சரிவுடன் முடிந்த மும்பை சென்செக்ஸ்!

வியாழன், 25 நவம்பர் 2021 (17:08 IST)
இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 454 புள்ளிகள் சரிந்து 59,795 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. 

 
கடந்த திங்கட்கிழமை மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1200க்கும் அதிகமான புள்ளிகள் இறங்கியதால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக வர்த்தக ஆரம்பத்தில் சென்செக்ஸ் இறங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து நேற்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 90 புள்ளிகள் அதிகரித்து 58,763 என்ற புள்ளியில் விற்பனையானது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 17540 என்ற புள்ளியில் விற்பனையானது. 
 
ஆனால் இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 454 புள்ளிகள் சரிந்து 59,795 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 14 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 121 புள்ளிகள் குறைந்து 17,536 புள்ளியாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்