தொடர்ந்து 4 நாட்கள் பங்குச்சந்தை ஏற்றம்.. இன்று எந்தெந்த பங்குகள் உயர்ந்துள்ளது?

Siva

வியாழன், 11 செப்டம்பர் 2025 (09:39 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்றும் நான்காவது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. எனினும், இந்த ஏற்றம் தொடர்ந்து நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்ந்து 81510 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 15 புள்ளிகள் உயர்ந்து 24,992 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. காலை வர்த்தகத்தில் ஏற்றம் இருந்தாலும், அதன் வேகம் குறைவாக இருந்ததால், மதியத்திற்கு பிறகு சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது.
 
இன்று சந்தையில் உயர்ந்த பங்குகளின் பட்டியலில் ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இந்துஸ்தான் இன்டஸ் இன்ட் பேங்க், ஐடிசி, ஜியோ ஃபைனான்ஸ், ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டிசிஎஸ் ஆகியவை அடங்கும்.
 
அதே சமயம், வர்த்தகத்தில் சரிவை சந்தித்த பங்குகளில் அப்போலோ ஹாஸ்பிடல், பார்தி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர், இன்ஃபோசிஸ், கோடக் மஹிந்திரா வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் ஆகியவை உள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்