தங்கம் விலை திடீர் சரிவு

வியாழன், 18 பிப்ரவரி 2016 (06:05 IST)
தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் திடீரென சரிந்தது. 
 

 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தாறுமாறாக விலை உயர்வை சந்தித்து வந்தது. வரும் நாட்களில் திருமண விழா மற்றும் பல்வேறு விழாக்கள் காரணமாக விலை உயர்வை சந்தித்து வந்ததாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம், ஒரு சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 21,576 ரூபாய்க்கும் விற்பனையானது. அதேபோல, வெள்ளி விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து 40,200 ரூபாய்க்கு விற்பனையானது.
 
பிளாட்டினம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் 2,815 ரூபாய்க்கும், சவரன் 22,520 ரூபாய்க்கும் விற்பனையானது.  

வெப்துனியாவைப் படிக்கவும்