10 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து முடிந்தது சென்செக்ஸ்

திங்கள், 9 மே 2011 (17:55 IST)
ரிலையன்ஸ், இன்போசிஸ் போன்ற உயர் விலை பங்குகளில் முதலீடுகள் செய்யப்பட்டதால், இன்று காலை ஏற்பட்ட சரிவைத் தாண்டி கடந்த வார இறுதியில் இருந்த நிலையை விட சற்று உயர்ந்து முடிந்தது சென்செக்ஸ்.

ஏற்கனவே, வட்டி விகித உயர்வு, பொருளாராத வளர்ச்சி குறையும் என்கிற இந்திய மைய வங்கியின் மதிப்பீட்டால் தொடர்ந்து சரிவை சந்தித்துவரும் இந்திய பங்குச் சந்தைகள், பன்னாட்டுச் சந்தையில் கச்சா விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால் மீண்டும் சரிவு ஜூரம் பற்றிக்கொள்ளத் தொடங்கியுள்ளது. அதன் விளைவே 125 புள்ளிகள் அதிகமாக தொடங்கிய பங்குச் சந்தை வணிகம் இறுதியில் அடிமட்டமாக முடிந்துள்ளதாகும் என்று பங்குச் சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்