பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (10:53 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு அதிக அளவு வேறுபாடு இல்லாமல் இருந்தன.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் துவங்கும் போது, ஹாங்காங், இந்தோனிஷியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா ஆகிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன.

காலை 10.20 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 14.10 (NSE-nifty) புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 2,934.00 ஆக உயர்ந்தது.

இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 64.04 (BSE-sensex) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 9,9,647.93 ஆக அதிகரித்தது.

மிட் கேப் 33.03, பி.எஸ்.இ. 500- 29.07, சுமால் கேப் 26.72 புள்ளிகள் அதிகரித்தன.

இன்று மும்பை,. தேசிய பங்குச் சந்தைகளில் அடிக்கடி அதிக அளவு மாற்றம் இருக்கும். எல்லா பிரிவு பங்கு விலைகளும் ஏற்ற இறக்கமாக இருக்க வாய்ப்புள்ளது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சிலவற்றில் உயர்ந்தும், சிலவற்றில் குறைந்தும் காணப்பட்டது.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 6.92, ஜப்பானின் நிக்கி 3.98, சீனாவின் சாங்காய் காம்போசிட் 1.49 புள்ளிகள் அதிகரித்தன.

ஆனால் தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 35.12, ஹாங்காங்கின் ஹாங்செங் 51.56 புள்ளிகள் குறைந்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 9.72, நாஸ்டாக் 0.15 புள்ளிகள் குறைந்தது. ஆனால் எஸ் அண்ட் பி 500- 01.29 புள்ளிகள் உயர்ந்தது.

ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் நேற்று எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-15.74 புள்ளிகள் அதிகரித்தது.


அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பொருளாதார நெருக்கடியை தீர்க்க, அந்நாட்டு மக்களவையில், 800 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி உதவி செய்வதற்கான திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். இதனை அமெரிக்கா மக்களவை (காங்கிரஸ்) ஏற்றுக் கொள்வதை பொறுத்தே, பங்குச் சந்தையின் போக்கு இருக்கும். இதன் பாதிப்புகள் இந்தியா உட்பட எல்லா நாட்டு பங்குச் சந்தையிலும் பிரதிபலிக்கும்.


மும்பை பங்குச் சந்தையில் காலை 10.34 மணியளவில் 758 பங்குகளின் விலை அதிகரித்தும், 347 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 26 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நிகரமாக ரூ.285.39 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் நிகரமாக ரூ.45.98 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்