சென்செக்ஸ் 66 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது

வெள்ளி, 12 அக்டோபர் 2012 (11:04 IST)
இன்போசிஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபவிகிதங்கள் சந்தையை உற்சாகப்படுத்தவில்லை. சென்செக்ஸ் இன்று 66 புள்ளிகள் சரிவுடன் துவங்கி 18,738.85 புள்ளிகளாக உள்ளது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 13.20 புள்ளிகள் சரிவு கண்டு 5,694.85 புள்ளிகளாக உள்ளது.

சில்லரை முதலீட்டாளர்கள் பங்குகளை லாப விகிதத்தில் விற்பனை செய்ததால் சென்செக்ஸ் இன்று துவக்கத்தில் சற்றே சரிவு கண்டது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 7.10% சரிவு கண்டு பங்கு ஒன்றுக்கு ரூ.2,351.60 புள்ளிகளாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்