சென்செக்ஸ் 55 புள்ளிகள் குறைந்தது

திங்கள், 9 மே 2011 (11:59 IST)
இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் 125 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், பங்குகள் விற்பனை அதிகரித்ததன் காரணமாக அடுத்த ஒரு மணி நேர வர்த்தக்கதிற்குப் பின் 55 புள்ளிகள் சரிந்துள்ளது.

ஆசிய பங்குச் சந்தைகளில் காணப்பட்ட உயர்வும், அமெரிக்க குறியீடுகளின் சாதகமான நிலையும் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்க உதவின. ஆனால், அதன் பிறகு முதலீட்டாளர்களும், பங்குச் சந்தை வணிகர்களும் வாகனம், வங்கிகள், த.தொ. நிறுவன பங்குகளை பெருமளவிற்கு விற்கத் தொடங்கியதால் மள மளவென்று சரிந்து 18,463 புள்ளிகளாக குறைந்தது. இது கடந்த வாரத்தின் இறுதி வணிக வேளையில் இருந்த நிலையை விட 55 புள்ளிகள் குறைவாகும்.

தேச பங்குச் சந்தைக் குறியீடான நிப்ஃடி, 26 புள்ளிகள் குறைந்து 5,525 ஆக ஆகியுள்ளது. இது இன்று காலை 10.15 மணி நிலவரமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்