சென்செக்ஸ் 54 புள்ளிகள் சரிவுடன் நிறைவு

திங்கள், 18 ஜூலை 2011 (16:43 IST)
மும்பைப் பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தக முடிவில் 54 புள்ளிகள் சரிந்து 18,507.04 புள்ளிகளுடன் நிறைவுற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடும் சற்றே குறைந்து முடிவில் 5,561.25 புள்ளிகளாக நிறைவுற்றது.

சென்செக்ஸ் இன்று மதியம் 18,623 புள்ளிகளாக அதிகரித்திருந்தது.

பி.எஸ்.இ. மிட் கேப் 0.22%, ஸ்மால் கேப் 0.37% அதிகரிப்புடன் நிறைவுற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்