சென்செக்ஸ் 34 புள்ளிகள் இறங்கியது

புதன், 21 செப்டம்பர் 2011 (17:11 IST)
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 34.13 புள்ளிகள் குறைந்து முடிவில் 17,065.15 புள்ளிகளாக உள்ளது.

இன்று 17,191 புள்ளிகள் வரை சென்ற சென்செக்ஸ் அதன் பிறகு அந்த உயர்வுப்போக்கைத் தக்கவைக்க முடியவில்லை.

இந்தியாவின் 2012ஆம் ஆண்டு வளர்ச்சி விகிதத்தை 7.5% என்று சர்வதேச நிதியம் கூறியதையடுத்து பங்குகள் விற்கப்பட்டு முதலீடுகள் வாபஸ் பெறுவது துரிதகதியில் நடைபெற்றதால் சரிவு கண்டது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 7 புள்ளிகள் குறைந்து முடிவில் 5,133.25 புள்ளிகளாக முடிந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்