சென்செக்ஸ் 136 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு

வியாழன், 21 ஜூன் 2012 (17:22 IST)
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 136 புள்ளிகள் அதிகரித்து 17,033 புள்ளிகளாக நிறைவுற்றது.

நிப்டி குறியீடு 44.45 புள்ளிகள் அதிகரித்து 5165 புள்ளிகளாக நிறைவுற்றது.

இன்றைய பி.எஸ்.இ வர்த்தகத்தில் பெல், எஸ்.பி.ஐ., எல் அன்ட் டி, ஸ்டிஎரிலைட், ஐ.டி.சி. நிறுவனப் பங்குகள் லாபம் கண்டன.

ரிலையன்ஸ், டி.சி.எஸ்., இன்டால்கோ, டாக்டர் ரெட்டீஸ், ஜிண்டால் ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பின்னடைவு கண்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்