பைனாப்பிள் ரசம்

ஞாயிறு, 10 பிப்ரவரி 2013 (10:20 IST)
FILE
பெரும்பாலான மக்களின் பேவரைட் ரச வகையாக இருக்கும் பைனாப்பிள் ரசத்தை சுலபமான முறையில் வீட்டிலேயே செய்து சுவையுங்கள்.

தேவையானவை

பருப்பு தண்ணீர் - 1 கப்
பைனாப்பிள் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
நெய் - தேவைகேற்ப
ரச தூள் - 2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப

செய்முறை

அன்னாசி பழத்தை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து வடிகாட்டி தனியே வையுங்கள்.

அடுப்பில் பருப்பு தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு ஆகியவற்றுடன் அன்னாசி பழ சாறு, ரச தூளை சேருங்கள்.

மற்றொரு கடாயில் நெய் சேர்த்து, கடுகு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து பைனாப்பிள் ரசத்துடன் சேர்த்து சூடாக பரிமாறுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்