பிரியாணி அடிப்பிடித்துவிட்டதா...?

சனி, 6 ஏப்ரல் 2013 (14:30 IST)
FILE
அனைவரும் தெரிந்துக்கொள்ளவேண்டிய எளிமையான அத்தியாவசிய கிச்சன் டிப்ஸ் இதோ...

வெங்காயம் நறுக்கிய பிறகும், பூண்டு உரித்த பிறகும் கைகளில் ஏற்படும் வாடையை போக்க கைகளை stainless steel ஸ்பூன்களில் தேயுங்கள்.

பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும்.

பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும்.

சமைத்த பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக சுத்தம் செய்ய அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போடுங்கள்.

சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வெந்நீரில் பிசையவும்.சிறிது பாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

இறைச்சி மிருதுவாக இருக்க அதனை வினீகரில் சிறிது நேரம் வைத்தால் போதுமானது.

சாம்பார் பொடியை மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டு விட்டால் சில நாட்கள் ஆன உடனேயே குணமும் மணமும் குறைந்து விடும். அதனால் கொஞ்சமாக அரைத்து வைத்து ஒரு பாலிதீன் கவரில் போட்டு வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவேண்டும். இதனால் சாம்பார் பொடி எப்போதுமே ஃபிரஷ்ஷாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்