சமைக்க தயாரா?

புதன், 12 டிசம்பர் 2012 (19:58 IST)
வாழைப்பழத்தை காகிதத்தில் சுருட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்தால் பல நாட்கள் கெடாமல் இருக்கும்

பூண்டினை 10 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊறவைத்தால் அதன் தோலினை மிக சுலபமாக உறிக்கமுடியும்

பால் காய்ச்சும் போது, பால் பொங்கி வழிவதை தடுக்க, பாத்திரத்தின் உட்புற விளிம்புகளில் வெண்ணையை தடவினால் பால் பொங்கி சிந்திவிடும் என்ற கவலை இல்லை.

வெங்காயம் நறுக்கும்போது வரும் கண்ணீரை தவிர்க்க, வெங்காயத்தை நறுக்குவதற்கு முன் அதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

எலுமிச்சபழங்களநிறைய நாட்கள் பாதுகாக்க அதன் மீது தேங்காய் எண்ணெய் தடவி, குளிர்சாதன பெட்டியில் ஒரு திறந்த பத்திரத்தில் வைக்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்