உடனடி பு‌ளியோதரை

சனி, 24 நவம்பர் 2012 (16:13 IST)
தேவையானவை:
அ‌ரி‌சி - ஆழா‌க்கு
சிவ‌ப்பு ‌மிளகா‌ய் - 4
உ‌ப்பு - தேவையான அளவு
பு‌ளி - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு
ம‌ஞ்ச‌ள் பொடி - 2 ‌சி‌ட்டிகை
நெ‌ல்லெ‌ண்ணெ‌ய், கடுகு - தா‌ளி‌க்க
உ. பரு‌ப்பு, க. பரு‌ப்பு - தலா 1 தே‌க்கர‌ண்டி
வே‌ர்‌க்கடலை - 3 தே‌க்கர‌ண்டி
க‌றிவே‌ப்‌பிலை - சி‌றித

செ‌ய்யு‌ம் முறை:
சாதத்தை உதிரியாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.

சிவப்பு மிளகாய், உப்பு, புளி, மஞ்சள் பொடி இவை அனைத்தையும் ‌விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

இ‌ந்த ‌விழுதை சாத‌த்‌தி‌ல் போ‌ட்டு கல‌ந்து ஒரு 10 ‌நி‌மிட‌ம் ஊற ‌விடவு‌ம்.

பிறகு வாணலியில் நல்லெண்ணெ‌ய் ‌வி‌ட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, கருவேப்பிலை தாளித்து இந்த சாதத்தில் கொட்டி நன்றாக கிளறி மூடி வைத்துவிடலாம்.

அ‌வ்வளவுதா‌ன் புளியோதரை ரெடி.

வெப்துனியாவைப் படிக்கவும்