அவல் தோசை

ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (17:22 IST)
தேவையான பொருட்கள்:
 
கெட்டி அவல் - ஒரு கப் 
புளித்த மோர் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு. 
செய்முறை:
 
அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பொடியாக ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். 
 
பச்சைமிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, தோசைமாவு பதத்துக்கு கரைத்து நிதானமான தீயில் தோசைகளாக வார்க்கவும். 
 
விருந்தினர்கள் வந்தால் இந்த தோசையை உடனடியாக செய்து அசத்தலாம். புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம். அபார ருசியுடன் மெத்தென்று இருக்கும். 
 
ந‌ன்‌றி: பசுமை இ‌ந்‌தியா!

வெப்துனியாவைப் படிக்கவும்