‌வி‌த்‌தியாசமான ப‌ஜ்‌ஜி‌க்கு...

புதன், 7 மார்ச் 2012 (20:49 IST)
வி‌த்‌தியாசமான ப‌ஜ்‌ஜி‌க்கு...

பஜ்ஜி செ‌ய்ய ‌நினை‌க்கு‌ம் போது கடலை மாவு அரிசி மாவு தீர்ந்துவிட்டால் கலவையே வேண்டாம். கோதுமை மாவில் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம் சேர்த்து பஜ்ஜி செய்யலாம். நன்றாக இருக்கும்.

கிழங்குகள் விரைவில் வேக...

கிழங்குகளை அரிசி கழுவிய நீரில் வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

கொழுக்கட்டைகள் விரிந்து போகமலிருக்க...

கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது தண்ணீருடன் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு கிளறினால் கொழுக்கட்டை விரிந்து போகாமலிருக்கும்.

சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால்...

சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால் வெறும் சோற்றை உருண்டையாகப் பிடித்து, அதை அப்படியே சாம்பார் உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்தால் அதிகமான உப்பை இந்த சோற்று உருண்டை இழுத்து விடும்.

உளுந்துவடை செய்யும் போது...

காலையில் சுட்ட அடைமாவு மீதமானால் அதை இட்லித் தட்டில் வேகவைத்து துண்டுகளா‌க்கி வேகவைத்த கொத்தவரங்காயுடன் சேர்த்து உசிலி செய்தால் புதுமையானதாகவும் சுவையாகவும் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்