சோளம் வறுவல்

செவ்வாய், 22 மே 2012 (15:18 IST)
தேவையான பொருட்கள் :

சோள மணிகள் 500 கிராம்

தயிர் 200 கிராம்

இஞ்சி, பூண்டு விழுது 2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் விழுது 2 தேக்கரண்டி

கரம் மசாலா பொடி 2 தேக்கரண்டி

சீரகப் பொடி 2 சிட்டிகை

கடுகு எண்ணெய் 2 மேஜைக் கரண்டி

ஏலக்காய்ப் பொடி 2 சிட்டிகை

மிளகாய்ப் பொடி தேவைக்கேற்ப

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

1. தயிரை ஒரு துணியில் கட்டி தண்ணீர் வடியும் வரை தொங்க வைக்கவும்.

2. பிறகு அந்த தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய் வற்றல் விழுது, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா பொடி, எண்ணெய், உப்பு, சீரகப் பொடி, மிளகாய் ப் பொடி, ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

3. சோள மணிகளை இந்த மசாலாவில் 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

4. எண்ணெயை சூடாக்கி அதில் சோள மணிகளை வறுக்கவும்.

5. பொன்னிறமானவுடன் எடுத்து, கொத்தமல்லி சட்னியோடு பரிமாறவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்