சிவபெருமானுக்கு பொதுவாகவே அபிஷேங்கள் என்றால் கொள்ளைப் பிரியம் என்பதால், தொடர்ந்து நான்கு யாம பூஜைகளிலும் கூட, நல்லெண்ணெய், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் மற்றும் கரும்புச்சாறு போன்ற இனிமை பொருந்திய பொருட்களை வைத்து அபிஷேகங்கள் செய்யலாம்.
குறிப்பாக: முதல் யாம பூஜையில் பால், நெய்ஈ தயிர், பசு கோமயம் ஆகியவற்றைக் கலந்த பஞ்ச கௌவியம் கொண்டு அபிஷேகம் செய்யலாம். அதேபோல், வில்வ இலைகள் மற்றும் தாமரை ஆகியவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்தல் வேண்டும். அதற்கு நைவேத்தியமாக பயத்தம் பருப்பும் யசூர் வேதமும் ஓத வேண்டும்.
நான்காம் யாம பூஜையில் கரும்புச்சாறால் கழுவி அர்ச்சனை செய்து குங்குமப்பூ மற்றும் நந்தியாவட்டை பூக்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம். இப்போது அதர்வண வேதம் ஓதி, வெண் சாதம் நைவேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.