காதலரை அசத்த 25 வழிகள்

வியாழன், 12 பிப்ரவரி 2009 (17:10 IST)
காதலர் தினத்தன்று தமது காதலை அசத்த பல வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலை வேண்டாம். உங்களுக்கு நாங்களும் உதவுகிறோம்.

இதோ சில வழிகள்

கேக் கடைக்குச் சென்று கேக் ஒன்றை ஆர்டர் செய்து அதில் ஐ லவ் யூ என்று எழுதிக் கொடுங்கள்.

உங்களது காதலர் விரும்பிக் கேட்கும் அல்லது பார்க்கும் தொலைக்காட்சி/வானொலி நிலையத்திற்கு போன் செய்து உங்களது காதலை சொல்லி அவருக்குப் பிடித்த பாடலை ஒலி/ஒளிபரப்பலாம்.

வீட்டில் பிரச்சினை இல்லையென்றால் பூங்கொத்தை ஆர்டர் செய்து காலையிலேயே வீட்டிற்கோ அல்லது விடுதிக்கோ அனுப்பலாம்

நீங்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரேம் போட்டு அவருக்கு பரிசாக அளிக்கலாம்.

எதேச்சையாக அவரது கையில் கிடைக்கும் வகையில் காதல் கடிதத்தை வைக்கலாம்.

முன்னதாகவே காதலர் தின வாழ்த்து அட்டை வாங்கி அவருக்கு தபாலில் அனுப்பலாம்.

அவருக்கு காதல் கவிதை எழுதி அனுப்பலாம்.

உங்கள் காதலை தெரிவிக்கும் வகையில் ஒரு பிளாக் ஓபன் செய்து அவருக்கு காண்பிக்கலாம்.

அவர் பணியாற்றும் கணினியின் ஸ்கீரின் சேவரில் உங்களது காதலை வெளிப்படுத்தலாம்.

காதலர் தின வாழ்த்து அட்டையுடன் சிவப்பு ரோஜாவையும் பரிசாக அளிக்கலாம்.

அவரது புகைப்படத்தை வைத்து கைகளால் வரையப்பட்ட ஓவியத்தை பரிசளிக்கலாம்.

நீங்கள் அவ்வப்போது சந்திக்கும் இடத்தில் இருக்கும் மரத்தில் இதயத்தை வரைந்து அதில் உங்கள் இருவரின் பெயரையும் எழுதலாம்.

அவருக்கு மிகவும் பிடித்த பாடல்களின் தொகுப்புகளை பதிவு செய்து அளிக்கலாம்.

அவர் மிகவும் விரும்பும் அல்லது அவருக்கு தேவைப்படும் பொருள் ஒன்றை வாங்கி அளிக்கலாம்.

அவரது கையில் கிடைக்கும் வகையில் ஐ லவ் யூ என்று எழுதிய அட்டையுடன் ரோஜா பூ சேர்த்து வைக்கலாம்.

மின்னஞ்சலில் எண்ணற்ற வாழ்த்து அட்டைகளை அனுப்பி திக்குமுக்காடச் செய்யலாம்.

நீங்கள் அவரை எதற்காக காதலிக்கின்றீர்கள் என்று 25 குறிப்புகள் அடங்கிய கடிதத்தை அவரிடம் அளிக்கலாம்.

ஒரு சிகப்பு அட்டையை இதய வடிவில் வெட்டி அதில், உனக்குத் தெரியுமா? என் இதயத்தின் ராணி/ராஜா நீதான் என்று எழுதி அவருக்கு கொடுங்கள்.

எப்போது, என்றைய தினம் நீங்கள் உங்கள் காதலரை விரும்ப ஆரம்பித்தீர்கள் என்று எழுதி அவர் கையில் கிடைக்கும்படி செய்யுங்கள்.

உங்களது முதல் சந்திப்பைப் பற்றி விரிவாக எழுதி அவருக்கு கொடுங்கள்.

உங்களுடைய நண்பர்களும், அவர்களுடைய காதலர்/காதலிகளையும் வரவழைத்து இவர்தான் என் காதலி / காதலர் என்று அறிமுகப்படுத்தலாம்.

அவர் மிகவும் விரும்பும் நபரின் கையெழுத்து அல்லது புகைப்படத்தை அளித்து அசத்தலாம்.

வெகு நாட்களாக அவர் ஆசைப்படும் ஒரு பொருளை வாங்கிக் கொடுத்து மகிழ்விக்கலாம்.

ஐ லவ் யூ என்று கூறும் மியூசிக் கார்டை அல்லது பொம்மையை வாங்கி அவரது இடத்தில் வைத்து இயங்கச் செய்யலாம்.

அவருக்கு பிடித்த இனிப்புப் பொருளை வாங்கிக் கொடுத்து ஐ லவ் யூ சொல்லுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்