இனக்கவர்ச்சி |
காதல் | |
எதிர் பாலர் மீது ஏற்படும் ஒரு விதமான ஈர்ப்பு மட்டுமே. |
மனதில் எதிர் பாலர் மீது ஆழமான நட்புணர்வு உருவாகும். |
அவரை பார்க்கும்போது மட்டுமே நமது மனம் அவர் மீது அலைபாயும். |
அவர் கண்ணெதிரே இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரைப் பற்றியே மனம் சிந்தித்துக் கொண்டிருக்கும். |
அவரைப் பற்றி எந்த வித அடிப்படையும் தெரியாமலே அவரைப் பிடித்திருக்கும். |
அவரைப் பற்றிய நல்ல விஷயங்களை நம் மனது கணக்கெடுத்துக் கொள்ளும். |
அந்த ஈர்ப்பு ஒரு வித குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும். |
அவர் மீது ஏற்பட்டிருக்கும் அந்த உன்னத உணர்வு நமக்குள் புது உற்சாகத்தையே ஏற்படுத்தும். |
சில நாட்கள் பார்க்காமல் இருந்தால் அகராதியே நமக்கு மறந்துவிடும். |
சில நாட்கள் பார்க்காமல் இருந்துவிட்டால் நமக்குள் ஒரு சோகை நோய் வந்துவிடும். |
நமது விருப்பத்தின் மீது நமக்கே நம்பிக்கை இருக்காது. |
உங்களவர் உங்களுக்கு தான் என்ற வலிமையான எண்ணமே உங்களை தைரியசாலியாக்கும். |
அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் தேவையற்றதைப் பேச வைக்கும். |
அவரைப் பற்றி எதுவும் பேசாமல், அவரைப் பற்றி பேசுவதை மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பீர்கள். |
உங்களிடம் ஏற்பட்ட ஈர்ப்பு அவர்களை எந்த விதத்திலும் அசைக்காது. |
உங்களிடம் ஏற்பட்ட அந்த உணர்வு அவர்களுக்கும் சில நாட்களிலேயே தொற்றிக் கொள்ளும். |
அவர்களுடன் பேசவோ, பழகவோ நம்மிடம் எந்த தைரியமும் இருக்காது. |
அவர்களிடம் சாதாரணமாகப் பேசி, பழகி நல்ல புரிந்துணர்வு ஏற்படும். |
சில நாட்களில் வேறொருவரிடம் ஈர்ப்பு ஏற்பட்டு பாதை மாற அதிக வாய்ப்பு இருக்கும். |
பொறுமையாய் காத்திருந்து எதிர்காலத்தை திட்டமிட்டு காதலித்தவரை கைப்பிடிக்க வேண்டும் என்ற மனோநிலையை உருவாக்கக்கூடியது. |
வாலிப வயதில் ஏற்படும் ஹார்மோன் செய்யும் கோளாறு. |
பண்பட்ட மனதின் உண்மையான வெளிப்பாடு. |