அவன் என்னை காதலிக்கிறானா?

நீங்கள் ஒருவனை காதலிக்கிறீர்கள். ஆனால் அதே சமயம் அவனிடம் சென்று "ஐ லவ் யூ" சொன்னால் எங்கே உங்கள் மூக்கு உடைந்து விடுமோ என்று பயமாக உள்ளதா?

அவன் உங்களை காதலிக்கிறானா என்று கண்டுபிடிக்க இதோ சில டிப்ஸ்.

அவன் உங்களை காதலிக்கிறான் என்றால் :

காரணமே இல்லாமல் தினமும் பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொள்வான்.

அவன் அம்மாவின் பிறந்த நாள் பரிசை தேர்ந்தெடுக்க உங்களை அழைத்துச் செல்வான்.

நாள் முழுவதும் செய்ததை ஒன்றுவிடாமல் உங்களிடம் சொல்வான்.

அவன் உபயோகிக்கும் சென்ட், "ஆஃப்டர் ஷேவ்" ஆகியவை உங்களுக்கு பிடித்துள்ளதா என்று கேட்பான்.

ஒரே கதையை பத்து முறை சொன்னாலும் கவனத்துடன் குறிக்கிடாமல் கேட்பான். ( கேட்பது போலாவது நடிப்பான். )

உங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று கேட்டுத் தெரிந்து கொள்வான்.

நண்பர்களோடு நேரம் செலவழிப்பதை விட உங்களோடு இருக்க விரும்புவான்.

நீங்கள் கேட்காமலேயே அவன் அடித்த லூட்டிகளை உங்களிடம் சொல்வான்.

நீங்கள் ஐஸ்வர்யா ராய்க்கு குறைந்தவர் இல்லை என்பதைப் போல் உங்களைப் புகழ்வான்.

எளிதில் அவனை புண்படுத்தவோ உற்சாகப்படுத்தவோ உங்களால் முடியும்.

மேலே உள்ளவற்றில் ஏழுக்கு மேல் பொருந்தினால் தைரியமாக "ஐ லவ் யூ" சொல்லலாம்.

சுமார் நான்கு பொருந்தினால் காத்திருக்கவும்.

ஒன்றோ இரண்டோ பொருந்தினால் அவனை மறப்பதே நல்லது!

வெப்துனியாவைப் படிக்கவும்