படம் : அவ்வை சண்முகி குரல் : ஹரிஹரன், சித்ரா பாடல் : காதலா காதலா இயற்றியவர் : வாலி
காதலா காதலா காதலால் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
ஓயாமல் வீசும் பூங்காற்றைக் கேளு என் வேதனை சொல்லும் நீங்காத எந்தன் நெஞ்சோடு நின்று உன் ஞாபகம் கொள்ளும் தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி அந்த இன்பம் என்று வருமோ....
(காதலி)
ஓயாத தாபம் உண்டாகும் நேரம் நோயானதே நெஞ்சம் ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன் தீயானதே மஞ்சம் நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி மானே மறந்திடு இன்று ஜென்ம பந்தம் விட்டுப்போகுமா...