பொது இடத்தில் தம்பதிகள் முத்தமிடலாம்

புதன், 4 பிப்ரவரி 2009 (12:27 IST)
பொது இடத்தில் தம்பதிகள் முத்தமிடுவது ஆபாசமில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு தம்பதியினர் முத்தமிட்டபோது அவர்களை கையும் களவுமாகப் பிடித்த காவலர் அவர்கள் மீது ஆபாச தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்.

இதை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தம்பதிகள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ். முரளிதர் விசாரித்து முதல் தகவல் அறிக்கைக்கு தடை விதித்தார்.

நீதிபதி அளித்த தீர்ப்பில், ஆபாசத் தடை சட்டம் 294வது பிரிவை இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 34வது பிரிவுடன் சேர்த்து படித்தால், இந்த தம்பதிகள் மீதான முதல் தகவல் அறிக்கை ஏற்கக் கூடியதாக இல்லை. இந்த தம்பதிகள் முத்தம் கொடுத்துக் கொண்டது எங்களுக்கு இடையூறாக இருந்தது என்று அங்கிருந்தவர்கள் யாரும் புகார் அளித்ததற்கான ஆதாரம் முதல் தகவல் அறிக்கையுடன் இணைக்கப்படவில்லை.

புதிதாக திருமணமான தம்பதிகள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பொது இடத்தில் முத்தமிட்டதை ஏன் ஆபாசமாக எடுத்துக் கொள்ள வேண்டும்? இதற்காக குற்றவியல் வழக்கு தொடருவது வியப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.

காதல‌ர் ‌தின‌ம் கொ‌ண்டாட‌ப்பட உ‌ள்ள ‌பி‌ப்ரவ‌ரி மாத‌த்‌தி‌ல் இதுபோ‌ன்றதொரு ‌தீ‌ர்‌ப்பை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்து‌ள்ளது காதல‌ர்களு‌க்கு ம‌ன்‌னி‌க்கவு‌ம் காத‌லி‌க்கு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு ‌சிற‌ப்புதானே..

எ‌ன்ன காதல‌ர்க‌ள் பெரு மூ‌ச்சு ‌விடு‌ம் ச‌ப்த‌ம் கே‌ட்‌கிறது... கா‌த்‌திரு‌ங்க‌ள் த‌ம்ப‌திகளாகு‌ங்க‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்