சலக்கு சலக்கு சரிக சேல

படம் : சூரியவம்சம
பாடல்: சலக்கு சலக்கு சரிக சேல
குரல்: அருன்மொழி, சுஜாதா
வரிகள்: ஆர் ரவிஷங்கர்

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்க
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்க
உனக்குக் குளிரினா என்ன எடுத்துப் போத்திக்க
மாமன் தோளில மச்சம் போல ஒட்டிக்க
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்ப
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்ப

(சலக்கு)

அடியே மெட்டிச் சத்தம் கேட்காமத்தான
தலையே வெடிச்சிருச்சு வெகுநேரந்தான
வரப்பில் உன்னப் பாத்தா மறு வேளதான
இடுப்பில் நிக்காதைய்யா என் சேலதான
காலையிலும் காட்சி உண்டு சாத்திக்கடி கதவத்தான
கட்டிலுக்குக் கால்வலிச்ச கட்டாண்தர படுக்கதான
உடும்பு முழுக்க இப்ப ஒரு ரயிலு ஒடுது மச்சான
கலச்சு நொருக்கச் சொல்லி என் வளையல் கெஞ்சுது மச்சான
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்ப
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்ப

(சலக்கு)

கெழக்கே வெளுக்காம இருந்தாலென்ன?
இரவே முடியாமத் தொடர்ந்தாலென்ன?
குடையே பிடிக்காம நனஞ்சாலென்ன?
படுக்க சுருட்டாம கெடந்தாலென்ன?
மார்கழியில் பாய்விரிச்சா மாசிவந்தா மசக்கதான
ஆத்தங்கர அரசமரம் சுத்தவேணாம் ஜாலிதான
உனக்குள் விழுந்தபின்னே நான் எனக்குள் எழுந்ததென்ன?
வெளக்கு அனச்ச பின்னே ஒரு வெளிச்சம் தெரிஞ்சதென்ன?
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்ப
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்ப

(சலக்கு)

வெப்துனியாவைப் படிக்கவும்