காதலிக்கும் பல ஜோடிகள் தம்பதிகளாக ஆகாமலேயே பிரிவதற்குக் காரணம் என்று அவர்களில் யாரையும் சொல்ல முடியாது.
அதற்கு காரணம் என்றால், காதலர்கள் முதலில் அவசரப்பட்டு எதையும் யோசிக்காமல் காதலிப்பதுதான். பின்னர் தங்களது நிலைகளை உணர்ந்து இந்த காதல் நமக்கு சரிபடாது என்று பிரிந்து விடுகிறார்கள்.
இது ஒரு வகையில் ஆரோக்கியமான மனநிலை என்றுதான் சொல்ல வேண்டும்.
பொருந்தாத காதல் அல்லது ஆர்வமில்லாத துணையுடன் காதலித்து விட்டோமே என்ற ஒரே காரணத்திற்காக சேர்ந்து வாழாமல் விலகிப் போவது மனிதனுக்கே உரிய புத்திசாலித்தனம்.
காதலுக்கு முக்கிய எதிரிகளாக திடீர் பிரிவு, திடீர் திருமணம், பண நெருக்கடி, உறவுகளின் நெருக்கடிகள் நிற்கின்றன. இவை அனைத்தையும் தாண்டி காதலுடன் வாழ்வதும், காதலை தொடர்வதும் ஒரு சாதனைதான்.
கண்டதும் காதல், காணாமல் காதல் என்றில்லாமல், ஒருவரை ஒருவர் நன்கு உணர்ந்து, நமது நிலைமை என்னவென்பதை உணர்ந்து பிறகு நமது காதல் சரிதானா என்பதை உறுதி செய்த பின்னரே காதலை ஏற்கவோ, கூறவோ வேண்டும்.
webdunia photo
WD
அதை விடுத்து நம் மனதில் தோன்றிய காதலை எந்த அலசலும் இல்லாமல், காதலிப்பவரிடம் கூறி அவரது மனதிலும் அந்த எண்ணத்தை உருவாக்கிவிட்டு பின்னர், தனது நிலைக்காக வருந்தி காதலில் இருந்து பின் வாங்குவது என்பது எவ்வளவு கோழைத் தனம்.
இதனால் நமது மன நிலை மட்டும் அல்லாமல் அடுத்தவரது மனதையும் அல்லவா பாழாக்கி விடுவோம்.
மேலும், பொய்யாக காதலிப்பது போன்று நடிப்பவர்களை நம்பி ஏமாறுவது, காதலிப்பது போன்ற பாவனையில் ஊர் சுற்றிவிட்டு, பாக்கெட்டை காலியாக்கிவிட்டு கைவிரிப்பது, தன்னைப் பற்றிய விஷயத்தை மறைத்து, காதலிக்கும் வரை போலியாக நடிப்பது போன்ற விஷயங்கள் நாங்கள் மேற்சொன்ன காதல் கணக்கில் வராது.