காதலைச் சொல்லும் வழி மொபைல்

திங்கள், 19 ஜனவரி 2009 (14:12 IST)
ஆஸ்திரேலியாவில் மொபைல் போன் பயன்படுத்துவோரில் பாதிக்கும் மேற்பட்டோர் கழிவறையிலும் மொபைலை பயன்படுத்துவதாகத் தெரிய வந்துள்ளது. தவிர 25 விழுக்காட்டினர் தங்களின் காதலன்/காதலியிடம் காதலை தெரிவிப்பதற்கு சிறந்த வழியாக செல்போனை உபயோகிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

சுமார் 2 ஆயிரத்து 500 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், தைவானில் மொபைல் போன்கள் சமுதாயத்துடன் எவ்வாறு ஒன்றிணைந்துள்ளன என்று கேட்டறியப்பட்டது.

அதில் ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை 48 விழுக்காட்டினர் கழிவறையில் கூட மொபைல் போன்களை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. சீனாவில் இந்த விழுக்காடு 66 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 80 விழுக்காட்டினர் மற்றவர்களுடன் அமர்ந்து சாப்பிடும் போதும் கூட மொபைல் போன்களை பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். 62 விழுக்காட்டினர் வாகனம் ஓட்டும்போதும், 48 விழுக்காட்டினர் தூங்குவதற்கு முன்பும் மொபைல் போன்களை பயன்படுத்துகிறார்கள்.

குறிப்பாக மெல்பர்னில் வசிப்பவர்கள் தங்களின் காதலன்/காதலிகளுக்கு குறுந்தகவல் சேவை அனுப்புவதற்கும், பேசுவதற்கும் அதிகளவில் மொபைல் போன்களை உபயோகிப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் மொபைல் போனில் இருந்து பேசப்பட்ட அல்லது எஸ்எம்எஸ் விவரங்களை பரிசோதிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

தங்கள் கணவர் / மனைவி அல்லாத வேறொருவரிடம் கடலை (பேசுதல்) போடுபவர்களின் விழுக்காடு 30 என்று தெரிய வந்துள்ளது.

ஜிபிஎஸ் சேவையைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியர்களில் 25 விழுக்காட்டினர் தங்கள் துணை எந்தப் பகுதியில் உள்ளார்கள் என கண்டறிவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒரு மொபைல் போனால் என்னென்ன விஷயங்கள் அரங்கேறுகிறது பாருங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்