மனைவிக்கு பூக்கள், ஆடைகள், நகைகள் என எத்தனையோ பொருட்களை கணவர்கள் பரிசாக அளிப்பார்கள். அவர்களது அன்பை வெளிப்படுத்துவார்கள்.
ஆனால், இங்கிலாந்தில் மனைவிக்கு தனது சிறுநீரகத்தையே பரிசாக வழங்கியுள்ளார் ஒரு கணவர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாண்டி ஹால்டனுக்கு (44) 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன.
அவர் டயாலிஸ் மூலம் ரத்தத்தை சுத்திகரித்து கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டு இருந்தார்.
இறந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகத்தை எடுத்து இவருக்குப் பொருத்தும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து, உயிருடன் இருக்கும் ஒருவர் இவருக்கு சிறுநீரகத்தை கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறினர்.
இதைத் தொடர்ந்து தனது கணவரே சிறுநீரகத்தை தானம் செய்தால் நன்றாக இருக்கும் என்று மாண்டி ஹால்டன் விரும்பினார்.
மாண்டியின் விருப்பத்திற்கு அவரது கணவரும் இசைவு தெரிவித்து, அவரது சிறுநீரகத்தை வழங்கினார்.
தற்போது அறுவை சிகிச்சை முடிந்து மாண்டி ஹால்டன் நலமாக இருக்கிறார். இந்த கிறிஸ்மஸ் பண்டிகைக்கு என் கணவர் கொடுத்த மிக உயரிய பரிசு இது என்று கூறி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் மாண்டி ஹால்டன்.