எப்போதும் எதுவும் சாத்தியமே

திங்கள், 27 ஜூலை 2009 (14:22 IST)
காதலில் இது நடக்காது இது நடக்கும் என்று எதுவும் இல்லை. எப்போதும் எதுவும் நடக்கலாம்.

webdunia photoWD
எப்போதும் உரசியபடி, பேசிக் கொண்டே நாள் பொழுதுக்கும் ஒன்றாக இருக்கும் காதலர்கள் கடைசியில் சண்டைப்போட்டுக் கொண்டு நீ எனக்கு ஒத்து வர மாட்ட என்று பிரிவதும் உண்டு.

வெறும் பார்வையால் மட்டுமே காதல் பரிமாற்றம் முடிந்து திடீரென அவர் இல்லை என்றால் நான் இல்லை என்று ஒற்றைக் காலில் நின்று திருமணம் முடிக்கும் ஜோடிகளும் உண்டு.

எனவே காதலில் எப்போதும் எதுவும் சாத்தியம்.

நாம் நிஜ வாழ்க்கையில் பல காதல் ஜோடிகளைப் பார்த்திருப்போம். நாங்கள் காதலர்கள் என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டு ஊர் சுற்றித் திரிந்து, பல ஆண்டுகளாக தங்களது காதலை வளர்க்கும் காதலர்களை பல ஆண்டுகள் கழித்து பார்க்க நேர்ந்தால்.. மச்சான் எனக்கு கல்யாணம் ஆகிவிட்டதுடா. பொண்ணு திருச்சிப் பக்கம், தூரத்து சொந்தம்தான்டா என்று கொஞ்சம் கூட கூச்சப்படாமல் நம்மிடம் கூறுவார்கள்.

ஏன் முதலிலேயே தெரிந்து திருமணப் பத்திரிக்கை வைத்து அதுபோன்றவர்களின் திருமணத்திற்குப் போய் வந்தவர்களும் உண்டு.

webdunia photoWD
இப்படி இல்லாமல், டேய்.. அந்த பொண்ணு என்னையே பாக்குதுடா... எனக்கும் அந்த பொண்ணு மேல ஒரு விருப்பம் இருக்குடா என்று கூறித் திரியும் சிலர், திடீரென திருமணம் முடித்துக்கொண்டு தம்பதிகளாக நம்மை சந்திப்பவர்களும் உண்டு.

இவர்கள் பேசிக் கூட இருக்க மாட்டார்கள், வெறும் காதல் பார்வையிலேயே இவர்கள் திருமணம் வரை சென்றிருப்பார்கள். இதற்கும் காரணம் காதல்தான்.

பொத்தி பொத்தி வளர்த்த வீட்டில் ஒரு பெண்ணின் மண வாழ்க்கை இப்படித்தான் அமைந்தது. எங்கும் தனியாக அனுப்பி பழக்கமில்லாத ஒரு பெண்ணை, அவளது தந்தையிடம் பெண் கேட்டு வந்தான் ஒரு இளைஞன்.

நீ யார் என்றே எங்களுக்குத் தெரியாது, உனக்கு எப்படி பெண் கொடுப்பது என்று பெற்றவர்கள் கேள்வி கேட்க, அங்கு குறுக்கிட்ட பெண்ணோ, கட்டிக்கிட்டால் இவரைத்தான் கட்டிப்பேன் என்று உறுதியாகக் கூற அதிர்ந்தது பெற்றோர்கள் மட்டுமல்ல உற்றாரும்தான்.

பிறகு தீர விசாரித்ததில் இருவரும் கண் பார்வையாலே காதல் மொழி பேசி திருமண நிலைக்கு உயர்ந்தவர்கள் என்று தெரிய வர, ஜாம் ஜாம் என திருமணம் நடந்தேறியது.

மிகவும் கட்டுப்பாடான குடும்பத்தின் கடைக்குட்டியாகப் பிறந்து வளர்ந்த ஒரு பெண், காதலிக்கும் முடிவை எடுக்கிறாள். ஆனால் அவளுக்கு உறுதியாகத் தெரியும் இதற்கு நமது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்று, இருந்தும் காதல் அந்த உறுதியைத் தருகிறது.

வீட்டில் தெரிந்ததும் எப்போதும் போல சண்டை, பெண்ணோ எனக்கு திருமணம் என்று நீங்கள் செய்து வைத்தால் அது இவரோடுதான். இல்லை என்றால் திருமணப் பேச்சே வேண்டாம் என்று பிடிவாதமாக பல வருடங்களைக் கடக்க, இறுதியாக பெற்றோரே காதலனுடன் கைகோர்த்து வைத்தனர்.

webdunia photoWD
இந்த பெண்ணிற்கு வந்த உறுதி காதலிக்கும் அனைத்துப் பெண்களுக்கும் வர வேண்டும். அப்போதுதான் இளைஞர்கள் காதல் தோல்வியால் தாடிவிட்டு அலை‌கிறா‌ர்க‌ள் எ‌ன்பது போ‌ன்ற நகை‌ச்சுவைக‌ள் மறையு‌ம்.

எனவே காதலில் எப்போதும் எதுவும் நடக்கலாம். திருமணமோ, பிரிவோ காதலர்களின் உறுதிப்பாட்டில்தான் இருக்கிறது.