ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாரம்பரியம் மிக்க இந்திய மண்ணில் பிறந்து வளர்ந்து இந்திய கலச்சாரத்திலேயே ஊறியவர்கள் பலரும் தற்போது திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்வது, மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் என்று தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.
webdunia photo
WD
இந்த நிலையில் அவர்கள் எல்லாம் வெட்கி தலை குனியும் வண்ணம், ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த காதல் ஜோடி இந்தியாவிற்கு வந்து, கோயிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த பென் என்பவர் பிரபல பாப் பாடகர். இவருக்கும், அதே நாட்டைச் சேர்ந்த பாடகி இயோனும் காதலித்து வந்தனர்.
இவர்கள் காதல் கனிந்து திருமணத்திற்கு தயாரான போது, இவருக்கும், இந்து மத கலாச்சாரத்தின் மீதான நம்பிக்கை வெளிப்பட்டது.
அதனால் இந்தியாவிற்கு வந்து இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, வேலூர் மாவட்டம் அரியூர் பொற்கோயிலில் சக்தி அம்மா முன்னிலையில் கெட்டி மேளம் முழங்க வேத மந்திரம் ஒலிக்க இவர்களது திருமணம் நேற்று வெகு சிறப்பாக நடந்தது.
webdunia photo
WD
திருமணத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட தாலியை மணமகன் மணமகளுக்கு அணிவித்தார். இந்த திருமண வைபவத்தில் மணமக்களின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர். சாதாரண ஆஸ்ட்ரேலிய உடைகளில் அல்ல, நமது பாரம்பரிய பட்டுச் சேலையிலும், வேட்டிகளிலும் பல உறவினர்கள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஒருவனுக்கு ஒருவன் பாரம்பரியப்படி இவர்கள் பல்லாண்டு வாழ நாம் வாழ்த்துவோம்.