பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் ஒரு கிராமத்தைத் தத்தெடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி அமேதி தொகுதியிலுள்ள ஜெகதீஷ்பூர் கிராமத்தை ராகுல் காந்தி தத்தெடுத்தார். இந்த விழாவுக்காக அவர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெகதீஷ்பூருக்கு வந்தார். அதன்பின் இந்தத் தேர்தல் சமயம் வரை அவர் தான் தத்தெடுத்த கிராமத்துக்கே வரவில்லை. ஆனால் அந்த கிராமத்த்துக்குக் கூட சென்று ஸ்மிருதி ராணி மக்களோடு உரையாடி இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இவற்றை சொல்லியே வாக்குகளைப் பெற்றுள்ளா.