யாராக இருந்தாலும் சோதனை செய்வோம்.! அமைச்சரின் காரை நிறுத்திய அதிகாரிகள்..! கோவையில் பரபரப்பு...!!

Senthil Velan

சனி, 30 மார்ச் 2024 (15:10 IST)
கோவையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், அவ்வழியாக வந்த அமைச்சர் டிஆர்பி ராஜாவின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். 
 
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

பணப்பட்டுவாடாவை தடுக்க கோவையில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர், தேர்தல் கண்காணிப்பு சிறப்பு படை அதிகாரிகள், பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திமுக கொடியுடன் வந்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவின் காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

ALSO READ: யாரையும் மதிக்கத் தெரியாதவர் திருமா..! நிச்சயம் தோல்வி அடைவார்..! வறுத்தெடுத்த அண்ணாமலை..!!
 
காரில் என்னென்ன ஆவணங்கள் உள்ளது என்பனவற்றை சோதனை செய்து, பின்னர் காரை அனுப்பி வைத்தனர். அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அப்பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவர் வீட்டுக்கு சென்ற நிலையில் தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்