தேர்தல் விதிமீறல்.! எல்.முருகன் மீது வழக்குப்பதிவு..!!

Senthil Velan
வெள்ளி, 29 மார்ச் 2024 (12:07 IST)
தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல். முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
 
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
 
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில், நீலகிரி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக எல். முருகன் போட்டியிடுகிறார்.
 
இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு  செய்துள்ளனர். கடந்த 25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த பின் கடநாடு கிராமத்தில் அனுமதி இன்றி ஆலோசனை கூட்டம் நடத்தியதாக எழுந்த புகாரின் பேரில் தேனாடுகம்பை போலீசார் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்