தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வேலூரில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை திமுக ஊழல் செய்வதற்காக பயன்படுத்திக் கொள்கிறது என்று குற்றம் சாட்டினார்.
குடும்ப அரசியல், ஊழல், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை எதிர்ப்பது திமுகவின் முதன்மையான நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஜாதி, மதம், மொழி ரீதியில் தமிழ்நாட்டு மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்த திமுக முயல்கிறது என்றும் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் திமுக செல்லாகாசாகிவிடும் என்பதால் பிரித்தாலும் அரசியலை செய்கிறது என்றும் திமுகவின் பிரித்தாலும் அரசியலை அம்பலப்படுத்தாமல் ஓய மாட்டேன் என்று பிரதமர் தெரிவித்தார்.