சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் திமுகவுக்கு போடும் ஓட்டுதான் பிரதமர் மோடிக்கு வைக்கிற வேட்டு என்றார். ஏனென்றால், பிரதமர் மோடிதான் தமிழக மக்களுக்கு அடிக்கடி வேட்டு வைக்கிறார் என்றும் தமிழக மக்களை கண்டுகொள்வதில்லை என்றும் உதயநிதி தெரிவித்தார்.
2021-ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானார் மு.க.ஸ்டாலின் என குறிப்பிட்ட அவர், ஆனால், தவழ்ந்து முதல்வரானவர் ஒருவர் இருக்கிறார் என்றும் தவழ்ந்து சென்ற புகைப்படத்தை காட்டியதால் எடப்பாடி பழனிசாமிக்கு என் மீது கோபம் வருகிறது என்றும் கூறினார்.
திமுக ஆட்சியில் ஒரு குடும்பம்தான் வாழ்கிறது என்று மோடி சொல்கிறார். ஆமாம், ஒட்டுமொத்த தமிழகமும் திமுகவின் குடும்பம்தான் என்றும் கருணாநிதியின் குடும்பம்தான் என்றும் அவர் தெரிவித்தார். எங்களின் ஒரே லட்சியம் பாஜக அரசை ஓரங்கட்டுவதே என்று அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டார்.