அதிமுக தேர்தல் அறிக்கை..! எடப்பாடியிடம் ஒப்படைத்த தேர்தல் குழு!

Senthil Velan
திங்கள், 18 மார்ச் 2024 (16:23 IST)
அதிமுக தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அக்கட்சியை சேர்ந்த தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒப்படைத்தது.  
 
நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டது.  இந்த குழுவில், அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன்,  அமைப்பு செயலாளர் செம்மலை,  பொன்னையன்,  டி ஜெயக்குமார்,  பொள்ளாச்சி ஜெயராமன்,  ஆர் பி உதயகுமார்,  வளர்மதி,  வைகைச் செல்வன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
 
இந்நிலையில் தேர்தல் குழுவினர் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு நேரில் சென்றது. அதிமுக தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை எடப்பாடி பழனிச்சாமியிடம் அவர்கள் வழங்கினர்.

ALSO READ: மதிமுக சார்பில் திருச்சியில் போட்டியிடப் போவது யார்.? இவர்தான் வேட்பாளரா.? வைகோ அறிவிப்பு..!
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன்,   தேர்தல் அறிக்கையில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் அதிமுக பொதுச்செயலாளர் மேற்கொள்வார் என்று தெரிவித்தார்.  விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்