ஜாமீன் என்றால் என்னவென்று தெரியுமா ? – மோடிக்கு ப சிதம்பரம் கேள்வி !

புதன், 10 ஏப்ரல் 2019 (12:59 IST)
ப சிதம்பரதை ஜாமீனில் வெளியில் இருப்பவர் என்று கூறிய மோடிக்கு ஜாமீன் என்பது விதிகளின் அடிப்படையில் வழங்கப்படுவது என சிதம்பரம் பதிலடி தந்துள்ளார்.

தமிழகத்திற்கு நேற்று 4 ஆவது முறையாகப் பிரச்சாரத்திற்கு வந்தார் பிரதமர் மோடி. கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட மோடி பேசும்போது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரைக் கடுமையாக விமர்சனம் செய்தார். அதில் ’காங்கிரஸ் கட்சியின் தேர்தல அறிக்கையைப் படித்து பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த அறிக்கையை தயாரித்த அமைச்சர் ஐ.என்.எக்ஸ் வழக்கில் ஜாமீனில் வெளியே இருப்பவர். சொந்த இருப்பை காட்டிக்கொள்வதற்கே சிலருக்கு ஜாமீன் தேவைப்படுகிறது’ எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்துள்ள சிதம்பரம் ‘மோடி அரசில் ஒருவர் குற்றவாளியாக முதலில் அறிவிக்கப்படுவார். பின்னர்தான் அவர் மீதான் விசாரணை நடத்தப்படும். மோடிக்கு சட்டங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தனது நண்பரான அருண் ஜெட்லியிடம் கேட்டுக்கொள்ளலாம். ஜாமீன் என்பது விதிமுறைகளின் படி வழங்கப்படுவது. சிறை என்பது விதிவிலக்ககாக வழங்கப்படுவது, முதலில் அதைப் புரிந்துகொள்ளுங்கள்.’ எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்