உத்தரப்பிரதேசம் மாநிலம் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். அதில் மொத்தமாக 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன, எனவே பிரதமரை தீர்மானிப்பதில் உத்தரப் பிரதேசம் மிக முக்கியப்பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தமுறை உததரப்பிரதேசத்தில் பாஜக அதிகளவிலான தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.
அதனால் இம்முறை பாஜகவை வீழ்த்த பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி ஆகியக் கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளன. அதனால் இந்த இரண்டு கட்சிகளும் போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸின் இந்த முடிவுக்கு மாயாவதி எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை வீழ்த்த எங்கள் கூட்டணியே போதுமானது, காங்கிரஸின் கருணை எங்களுக்குத் தேவையில்லை எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து மாயாவதி தனது முடிவை வெளியிய்ட்டுள்ளார். அதில் ‘ நான் போட்டியிட்டால் வெற்றி அடைவது உறுதி. நான் வெற்றி பெறுவதை விட நாம் (கூட்டணி) வெற்றி பெறுவதே முக்கியம்.தேவைப்பட்டால் பின்னர் ஒரு தொகுதியை காலி செய்துவிட்டு அதில் நின்று நான் வெற்றி பெற்றுவிடுவேன். ஆனால் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெற பிரச்சாரத்தில் கண்டிப்பாக ஈடுபடுவேன்’ எனக் கூறியுள்ளார்.